நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் மோவ் பகுதியில் வெற்றியை கொண்டாடிய நபர்கள் மீது கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அங்குள்ள கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அங்கு போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.