Tuesday, April 22, 2025

தேச விரோதிகளின் குரலாக பிருத்விராஜ் இருக்கிறார் : ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு

பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் நடிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ஆம் பாகமாக உருவான ‘எம்புரான்’, கடந்த 27ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் இந்துக்களைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ‘எம்புரான்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அனுமானின் மற்றொரு பெயரான பஜ்ரங்பலியின் பெயரை வைத்ததன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளது.

Latest news