Monday, January 20, 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை : சென்னையில் 8000 போலீஸ் பாதுகாப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 24.12.2024 அன்று இரவு முதல் பொதுமக்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், 24.12.2024 அன்று இரவு முதல் 25.12.2024 வரை சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் 8000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் சீரான போக்குவரத்து மற்றும் தேவாலயங்களின் அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest news