Saturday, July 12, 2025

சீனாவின் தண்ணீர் அணுகுண்டு! பேரழிவை சந்திக்கப்போகிறதா இந்தியா? கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அருணாசல பிரதேச எல்லை அருகே சீன பகுதியில் அந்நாடு அணை ஒன்றை அமைக்கிறது. இந்த அணை தண்ணீர் வெடி குண்டுக்கு சமம் என்று அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு கவலை தெரிவித்துள்ளார். பிரம்மபுத்திரா நதி திபெத் வழியே செல்லும்போது யர்லங் சாங்போ ஆறு என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சீனா உலகிலேயே மிக பிரமாண்டமான அணையை அங்கு அமைத்து வருகிறது. அருணாசல பிரதேச எல்லை அருகே இந்த அணை அமைவதால் இது அந்த பகுதிக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். அதனால் இதுகுறித்து அந்த மாநில முதலமைச்சர் பல்வேறு முறை கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் சர்வதேச நீர் கொள்கைளில் சீனா கையெழுத்திடவில்லை என்றும் எனவே அணை கட்டும் விவகாரத்தில் சீனாவை நம்ப முடியாது என்றும் சீனா என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் “ராணுவ அச்சுறுத்தலை தவிர்த்து சீனா கட்டும் அணை பாதிப்பை ஏற்படுத்தலாம். அது ஒரு தண்ணீர் வெடிகுண்டு போல் உள்ளது. என்று தெரிவித்துள்ளார். சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிட்டிருக்கிறது என்பது அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. 5 ஆண்டுகளில் அல்லது 2030க்குள் இந்த பணிகள் முடிக்கப்படலாம் என்ற வகையில்  திட்டமிட்டு சீன அரசு இதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கு அணை கட்டுவதன் மூலம் தண்ணீரை ஒரு கேடயமாக பயன்படுத்தி, நீர் என்ற வடிவில் வெடிகுண்டை இந்தியா மீது வீச சீனா முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாமல் சீனா திடீரென தண்ணீரை திறந்து விட்டால் ஆற்றில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் மூலம் சியாங் படுகை முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருப்பதில் உண்மை இருக்கவே செய்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news