அண்டை நாடுகளை சீண்டி பார்க்கும் சீனா! கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

306
Advertisement

பல வருடங்களாகவே தெற்கு சீன கடலை பற்றிய எல்லை பிரச்சினை பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் ப்ரூனெய் நாடுகளுக்கிடையே நிலவி வருகின்றது.

இந்நிலையில், சீனா தெற்கு சீன கடல்பகுதிகளில் புதிய கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு ஸ்பிராட்டிலில் உள்ள எல்தாத் பாறைகள் பகுதியில் 2009ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை பதிவாகி உள்ள முக்கிய மாற்றங்களை Bloomsberg  செய்தி நிறுவனம் செயற்கைகோள் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.

எல்லை முடிவாகாத இடத்தில் கட்டுமான பணிகளை செய்வது மற்றும் எல்லைகளை பெரிதாக்குவது போன்ற நடவடிக்கைகள் அரசியல் உள்ளர்த்தம் கொண்டது எனவும் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் அமைவதாகவும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

1947ஆம் ஆண்டின் வரைபடத்தின்படி 80 சதவீதம் தெற்கு சீன கடல் தங்கள் நாட்டுக்கு சொந்தம் என சீனா வாதாடி வருகிறது. மேலும், ஆக்கிரமிப்பு குற்றசாட்டுகளை மறுத்துள்ள சீன வெளியுறவு துறை, அவற்றிற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், சீனாவுக்கு மட்டுமே சர்வதேச நாட்டு ஒழுங்கை மாற்றி எழுதக்கூடிய பலமும் திறனும் இருப்பதாகவும், ஆனாலும் அதை நடக்க விட மாட்டோம் என கருத்து  தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் தெற்கு சீன கடல் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.