கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷுண்டியன் கெமிக்கல் குழுமம், ஜனவரியில் நிறுவனத்தின் திருமண விகிதத்தை அதிகரிப்பதாக உறுதியளிக்கும் ஒரு கொள்கையை அறிவித்தது.
28 முதல் 58 வயதுக்குட்பட்ட அதன் ஒற்றை மற்றும் விவாகரத்து பெற்ற ஊழியர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் “திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்” எனக்கூறியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒரு நிறுவனம் அதன் சொந்த வேலையைப் பற்றி பேச வேண்டும். ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தனது கொள்கையைத் திரும்பப் பெற்றது.