வந்தவாசி அங்கன்வாடி மையத்தில் குடிநீர் என நினைத்து வார்னிஷை குடித்த மூன்று குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25 குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில், வர்ணம் பூசும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அங்கிருந்த வார்னிஷை குடிநீர் என நினைத்து குழந்தைகள் குடித்துள்ளனர். இதனையறிந்த அங்கன்வாடி பணியாளர், உடனடியாக குழந்தைகளை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனிடையே Paint அடிக்கும் பணியின் போது, குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்குள் அனுமதித்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.