பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் விஜய், த.வெ.க. அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதையடுத்து சட்டசபையில் கடும் எதிர்பார்ப்பு நிலவியது. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய உறுப்பினர்கள், தற்போதைய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர்.
அவர்கள் மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அறிவிப்பின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
உறுப்பினர்கள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வாக்கெடுப்பின் முடிவு தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
