சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்புகள்…

தமிழ்நாடு சட்டசபை தொடங்கியதும், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பொதுமக்களின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். ரூ.351 கோடி செலவில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்குத் தேவையான அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அதன்படி, தற்போது ரூ.38 ஆக உள்ள பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தப்படும்.

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். மேலும், ஐந்து அரசு மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறையில் முக்கிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News