மூதாட்டிக்கு கண்ணாடி பரிசளித்த முதல்வர் விஜய்!! என்ன விலை தெரியுமா?

தமிழ்நாட்டின் விவசாய வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று திறந்து வைத்தார்.

அணையைத் திறந்து வைத்த பின்னர், மேட்டூர் அருகே உள்ள சின்னக்காவூர் கிராமத்திற்கும் முதலமைச்சர் விஜய் சென்றார். அங்கு விவசாயி ஒருவரின் வீட்டிற்கு திடீரென சென்ற அவர், குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடினார். விஜய்யை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் அந்த வீட்டில் இருந்த மூதாட்டி மிகவும் உற்சாகமடைந்தார். அவர் விஜய்யின் கையைப் பிடித்தபடி அவரது வாகனம் வரை சென்றார்.

அப்போது, மூதாட்டியின் அன்பால் நெகிழ்ந்த விஜய், தான் அணிந்திருந்த கிறிஸ்டியன் டியோர் நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணாடியை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும், அந்த கண்ணாடியை அவரே மூதாட்டிக்கு அணிவித்தார். அந்த கண்ணாடியின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. விஜய்யின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும், தற்போது அந்த மூதாட்டி வைரலாகி வருகிறார்.

மேலும், அணை திறப்பு நிகழ்வின்போது விவசாயிகளுடன் கலந்துரையாடிய விஜய், அணை நீரால் கிடைக்கும் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். பாசன வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

Related News

Latest News