தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) தொடங்கி வைத்தார். தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11-க்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகத்தில் மொத்தம் 762 வகையான மருந்துகள் கிடைக்கும். பொதுமக்களின் மருத்துவச் செலவு சுமார் 75 சதவிகிதம் வரை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 , சென்னையில் 33 இடங்களிள் மருந்தகங்கள் செயல்பட உள்ளன.