முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் மன்மோகன் சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.