எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, காரல் மார்க்ஸ் குறித்த குறும்படத்தை பார்த்தார். பின்னர் மாமேதை கார்ல் மார்க்ஸ்க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
