Monday, December 29, 2025

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.. இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று காலை மெரினாவுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து வேப்பேரி பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

Related News

Latest News