22 ஆண்டுகளாக சிக்கன் மட்டுமே
சாப்பிடும் இளம்பெண்

544
Advertisement

22 ஆண்டுகளாக சிக்கன் மட்டுமே சாப்பிட்டு
அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்
ஓர் இளம்பெண். அந்த 22 ஆண்டுகளாகக்
காய்கறிகளோ பழங்களோ அவர் சாப்பிடவில்லையாம்.

யார் அந்த இளம்பெண்?

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்தவர் சம்ரோ
மன்றோ. 25 வயதாகும் அந்தப் பெண்ணுக்கு 3 வயதாகும்
போது உணவுடன் உருளைக்கிழங்கை பிசைந்துகொடுத்து
உள்ளனர் பெற்றோர். அந்த உணவால், சிறுமியான
சம்ரோ மன்றோவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

உணவுக் கோளாறு நீங்குவதற்காக சிகிச்சை செய்தபோதும்
அது பலன் தரவில்லை. இதனால், வேறுவழியின்றி சிக்கன்
கட்டிகள், சிக்கன் சிப்ஸ் உள்பட சிக்கனில் செய்யப்பட்ட
நொறுங்குத்தீனிகளை சாப்பிட்டே உயிர்வாழ்ந்துவருகிறார்.

கோடைக்காலத்தில் காலையில் அவர் உணவு எதுவும்
சாப்பிடுவதில்லையாம். மதிய வேளையில் மட்டும் 6 முதல்
8 சிக்கன் துண்டுகளை சாப்பிடுகிறாராம்.

”நான் நன்றாக சாப்பிட வேண்டும் என்று என் தாத்தா
விரும்புகிறார். நான் ஆப்பிள் சாப்பிட முயன்றேன். ஆனால்,
என் உடல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றவர்கள்
சாண்ட்விச் சாப்பிடும்போது அதனைப் பார்த்து ஏக்கமாக
இருக்கும்.. அதன் வாசனை என் மூக்கைத் துளைக்கும்.

ஆனால், என் உடம்பு அதனை ஏற்றுக்கொள்ளாதபோது
என்ன செய்வது? என் இதயம் காய்கனி, சாண்ட்விச்சுகளை
சாப்பிடச் சொல்கிறது. என் மூளையோ அதனை ஏற்க மறுக்கிறது.
சைவ உணவை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்று
வருந்துகிறார் சம்ரோ மன்றோ.

சிக்ஸ் பேக் ஏற்பட வேண்டும் என்பதற்காக இளைஞர்களும்
நடிகர்களும் சிக்கன் சாப்பிடுவது வழக்கம். ஆனால், ஒவ்வாமை
காரணமாக சிக்கன் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் பெண்ணின்
நிலையோ பரிதாபமாக உள்ளது.

சிறுவயதில் எந்த உணவை சாப்பிட வைத்து தாய்மார்கள்
பழக்குகிறார்களோ அந்த உணவையே பெரியவர்களாக
வளர்ந்தபின் உடல் ஏற்றுக்கொள்ளும். சிறுவயதில் சாப்பிட்டுப்
பழகாத எந்த உணவையும் பிற்காலத்தில் உடல் ஏற்றுக்கொள்ளாது
என்பது பொதுவான மருத்துவத் தகவல். சம்ரோ மன்றோவோ
வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு வருந்துகிறார்.