சாம் கரண் இல்லனா என்ன? பென் ஸ்டோக்ஸை நெருப்பாய் இறக்கிய CSK!

68
Advertisement

முன்னெப்போதும் இல்லாத பரபரப்பான திருப்பங்களோடு IPL ஏலம் நடைபெற்று வருகிறது. சாம்கரண், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரன், கேம்ரூன் கிரீன் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஏலத்தில் அதிக வரவேற்பு இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் அபிமான வீரராக மட்டுமில்லாமல் அணியின் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்த சாம் கரணை ஏலத்தில் எடுக்க CSK அணி அதிகம் போராடியது.

எனினும், சாமை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் அணி ஒற்றை காலில் நிற்க, CSK அணிக்கு அவரை தக்க வைக்கும் வாய்ப்பு பறிபோனது. சாம் கரண் இல்லாதது சற்றே பின்னடைவாக கருதப்பட்டாலும், பென் ஸ்டோக்ஸை எப்படியாவது அணியில் இறக்க வேண்டும் என மற்ற அணிகளோடு விடாமல் முயற்சித்து 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை  தன்வசப்படுத்தியது CSK. 

Advertisement

உலகக்கோப்பை உள்ளிட்ட பல முக்கிய போட்டிகளை இங்கிலாந்தின் கேப்டனாக வழிநடத்தி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ள பென் ஸ்டோக்ஸ் CSKவுக்கு கிடைத்த பெரிய பலமாக பார்க்கப்படுகிறார்.

CSK அணியில் இணைந்த செய்தியை மஞ்சள் நிற புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட, CSK ரசிகர்களும் அவ்வாறே  போஸ்ட் செய்து வருவதால் சமூகவலைதளங்களை மஞ்சள் நிறம் ஆக்கிரமித்து வருகிறது. CSK இறக்கியுள்ள பென் ஸ்டோக்ஸ் எனும் நெருப்பு அதற்குள்ளாகவே பற்றியெரிய தொடங்கி விட்டது என்றே கூறலாம்.