சென்னை மெட்ரோ ரயில் என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துக்கான விரைவான தொடருந்து சேவையாகும். 2015 ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி முதற்கட்ட சேவை ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டது.
மெட்ரோ சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இரண்டாம் கட்டப் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் சுமார் 40 கோடி பயணித்ததாகத் தெரிவித்த மெட்ரோ நிர்வாகம், நன்றியும் தெரிவித்துள்ளது.