Monday, October 6, 2025

புதுப் பொலிவுடன் திறக்கப்படும் சென்னை மெரினா நீச்சல் குளம்

சென்னை மெரீனா பீச்சில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. இந்த நீச்சல் குளம் பராமரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனதால், இதனை மீண்டும் பராமரிப்பதற்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மெரீனா நீச்சல் குளத்தில் அனைத்து பராமரிப்புப் பணிகளும் முடிந்து விட்டன. இந்த நீச்சல் குளத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சிறப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்குத் தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 2.50 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தன. இதனால், மெரினா நீச்சல் குளம் நாளை(07.10.25) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.

மெரினா நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல்படும். இதில், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News