சென்னை விமான நிலையத்தில் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி தொடக்க விழா இன்று நடைபெற்றது

317
Advertisement

சென்னை மீனம்பாக்கம் விமான வழித்தட கட்டுப்பாட்டு மையத்தில் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி தொடக்க விழா நடந்தது. இவ்விழாவை தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையக இயக்குனர் மாதவன் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப வல்லுனர்கள், இதர சாப்ட்வேர் தொழில்நுட்ப உதவியின்றி புதிய தானியங்கி தகவல் பரிமாற்ற கருவியை உருவாக்கி உள்ளனர்.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த கருவியை தயாரித்துள்ளனர். இதன் மூலம் உலகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு இடையே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தகவல்கள், வானிலை தகவல்கள், விமான பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல்களை அதிவேகத்தில் பரிமாறி கொள்ள முடியும்” என்றனர்.