சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டுக்கு முத்தமிட்ட நபர்! அதிர்ச்சி சம்பவம்

174
Advertisement

சீனாவில் சென்(Chen) என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து குவோலி குகைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு இருந்த மூன்று சவப்பெட்டிகளை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமில்லாமல், சவப்பெட்டிக்குள் இருந்த எலும்புகளை அகற்றி விட்டு, மண்டை ஓட்டிற்கு முத்தமும் கொடுத்துள்ளார் சென்.

சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வைரலாகவே, கடந்த வருடம் நடந்த இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூகவலைதளங்களில் கவனம் ஈர்க்கவே சென்னும் அவர் நண்பர்களும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

விசாரணைக்குட்படுத்தப்பட்ட சென்னுக்கு ஒன்பது மாதங்கள் நிபந்தனையுடன் கூடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மியோ பழங்குடியினர் அடக்கம் செய்ய பயன்படுத்தும் குவோலி குகைப் பகுதி 2015ஆம் ஆண்டு கலாச்சார நினைவுச்சின்ன பாதுகாப்பு தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.