டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிலையில், வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய தில்லி என பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.