நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், நேற்று இரவு 10.30 மணியளவில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை ஏந்தி இளைஞர்கள் பைக் பேரணிகளை நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசார் முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. பின்னர் போலீசார் தடியடி நடத்தினர்.