கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை ஆகஸ்ட் 11ல் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டமிட்டுள்ளது.