தீப்பந்தங்களை ஒருவர்மீது ஒருவர் எறிந்து கொண்டாட்டம்

334
Advertisement

வழக்கத்துக்கு மாறான ஒரு கொண்டாட்டத்தைக் காண விரும்புகிறீர்களா?

குவாத்தமாலா நகருக்குச் செல்லுங்கள்.

இந்த நகரில் பொதுமக்கள் தீப்பந்தங்களை ஒருவர்மீது ஒருவர் எறிந்து விநோதமாகக் கொண்டாடுகிறார்கள்.

மெக்ஸிகோவுக்குத் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஒவ்வோராண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி Virgin Mary தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தீப்பந்துகளை ஒருவர்மீது ஒருவர் எறிந்து மகிழ்கின்றனர் இங்குள்ள மக்கள்.

18 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குவாத்தமாலா நாட்டில் வர்ஜின் மேரி தினம் பாரம்பரிய இசை மற்றும் தேசிய விழாவாக உள்ளது. அதனால் இந்த நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தால் வருடத்தின் மோசமான அனுபவங்கள், எதிர்மறை உணர்வுகள், பொறாமைகள் அனைத்தும் சாம்பலாகி விடுவதாக மக்கள் நம்புகின்றனர். அதனால் பாடல், நடனம் மூலம் இந்தப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.

அனைத்துக் கெட்டவற்றையும் எரித்து கருத்தரிப்பைத் தூய்மைப்படுத்துகிறது என்பது இந்தக் கொண்டாட்டத்தின் அடிப்படைக் கருத்தாக உள்ளது.