CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 95% பேரும் மாணவர்கள் 92.63 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
CBSE 10ம் வகுப்பு – TOP 5 மண்டலங்கள் : திருவனந்தபுரம் 99.79 %, விஜயவாடா 99.79 %, பெங்களூரு 98.90 %, சென்னை 98.71% புனே 96.54 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பின் தங்கிய மண்டலங்கள் : பாட்னா 91.90%, டேராடூன் 91.60%, பிரயாக்ராஜ் 91.01%, நொய்டா 89.41%, கவுகாத்தி 84.14%