கால்வாயில் கிடந்த குழந்தையைக் காப்பாற்றிய பூனைகள்

210
Advertisement

கால்வாயில் கிடந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பூனைகள் பற்றிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் பந்த் நகர்ப் பகுதியிலுள்ள ஒரு தெருவின் கால்வாயில், பிறந்து 12 நாட்களேயான குழந்தை ஒன்று துணி சுற்றப்பட்டுக் கிடந்தது. அதைப் பார்த்த பூனைகள் கூட்டமாகக் குரல் எழுப்பத் தொடங்கின.

அதையடுத்து, அங்குவந்து பார்த்த குடியிருப்புவாசிகள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். தகவலைக் கேட்டு விரைந்து வந்த மும்பைப் போலீசார் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினர்.

அந்தக் குழந்தை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளது. அந்தக் குழந்தைக்கு பரி எனப் போலீசார் பெயர் சூட்டினர். பரி என்பதற்கு தேவதை என அர்த்தமாம்.

தற்போது அந்தத் தேவதையின் பெற்றோர் யார் என்பதை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

பூனையின் அருஞ்செயலைக்கண்டு அனைவரும் மலைப்பிலும் பேரானந்தத்திலும் உள்ளனர். மனிதர்களை விஞ்சிவிட்டன பூனைகளின் நற்குணம்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.