குழாயைத் திறந்து தண்ணீர் குடித்த பூனை…. வைரலாகும் வீடியோ

24
Advertisement

பூனை ஒன்று WATER FILTERரைத் திறந்து தண்ணீர் குடிக்கும்
வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதுகுத் தண்டை நேராக வளைத்து நிமிர்ந்து நிற்கும் அந்தப் பூனை
இரண்டு கால்களால் தரையில் ஊன்றி நின்றுகொண்டு,
ஒரு காலால் வாட்டர் பில்டரைப் பிடித்துக்கொண்டு,
மற்றொரு காலால் பில்டரைத் திறந்து தண்ணீரைக் குடித்து
தாகத்தைத் தணித்துக்கொள்கிறது.

தாகம் தணிந்த பிறகு குழாயை மூடுகிறது. மேலும், தண்ணீர்
சிந்தாமல் இருக்கிறதா என்பதையும் கவனிக்கிறது.

Advertisement

குழந்தையைப்போல செயல்படும் பூனையின் இந்தச் செயல்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பூனையின் மூளை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் மனித மூளையைப் போன்றது.
மருத்துவர்கள். தண்ணீர் குடிப்பதெனில் பூனைகளுக்குக் கொள்ளைப்
பிரியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால்தான் இப்படி செயல்படுகிறதோ
என எண்ணத் தோன்றுகிறது.

தண்ணீரை வீணாக்கக்கூடாது என்பது பூனைக்குத் தெரிந்திருக்கிறது-
மனிதர்களில் சிலருக்குத் தெரிவதில்லையே…