குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் சாதிப்பெயரில் இருந்தால் அதனை நீக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், வருவாய் கிராமங்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குடியிருப்புகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கவேண்டும் என்றும் ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் காலனி போன்ற பெயர்களை நிச்சயமாக நீக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நீர் நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் எனவும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. சாதிப்பெயர்களை நீக்கவும், சில பெயர்களை மாற்றவும் உத்தரவிட்டுள்ள தமிழக அரசு. இதனை நவம்பர் 11ம் தேதிக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளது.