Tuesday, July 15, 2025

நாயை கூட விட்டு வைக்கல.., தெருநாய்களுக்கு பாலியல் சீண்டல், வாலிபர் மீது வழக்கு பதிவு

செங்கல்பட்டு அண்ணா சாலை ஓரம் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இரவு நேரங்களில் வாலிபர் ஒருவர் பிடித்து துன்புறுத்தி பெண் நாய்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர்கள் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் நடத்தி வந்த தொடர் விசாரணையில் இந்த செயலில் ஈடுபட்ட நபர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த முருகன்,30. என்பதும் அதே பகுதியில் உள்ள மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம், தொடர்பாக நகர காவல்துறையில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news