Thursday, March 13, 2025

தடையை மீறி பிச்சை போட்ட நபர் மீது வழக்கு பதிவு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தூர் நகரில் உள்ள கோவில் முன்பு பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு 10 ரூபாய் பிச்சை போட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிச்சை போட்ட நபர் கைது செய்யப்பட்டால் அவருக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

Latest news