மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 21-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் கட்சி தொண்டர்களை சந்திப்பதற்காக இந்த ரேம்ப் வாக் மேடையானது போடப்பட்டு இருந்தது.
இந்த முறை தொண்டர்கள் அந்த ரேம்ப் வாக்கில் ஏறிவிடக்கூடாது என்பதற்காக மாநாடு தொடங்கும் முன்பேர் ரேம்ப் வாக்கின் இருபுறமும் கிரீஸ் தடவப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்ஸ்களையும் தாண்டி மேடையில் ஏறிக் குதித்து விஜய் அருகே நெருங்கி வந்தனர்.
அப்போது, திடீரென ஒரு தொண்டர், ரேம்ப் வாக் மேடையில் விஜயை நெருங்க முயன்றார். அவரைச் சுற்றி இருந்த பவுன்சர்கள், அந்த தொண்டரை அலேக்காக தூக்கி வீசினர். இது தொடர்பான வீடியா இணையத்தில் வெளியாக பெரும் விமர்சனங்கள் எழுந்தன.
பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் என்பவர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், நடிகர் விஜய், அவரின் 10 பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.