மதுரையில் புல்லட் பேரணி நடத்திய 170 விசிகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதுரை ராஜா முத்தையா மன்றம் பகுதியிலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமத்துவ புல்லட் பேரணி நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மேலப்பிடாவூர் கிராமத்தில் புல்லட் ஒட்டிய அய்யாச்சாமி என்ற பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட கண்டித்து இந்த புல்லட் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்துகொண்ட 170 பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.