Friday, August 29, 2025
HTML tutorial

ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? இது தெரியாம போச்சே..!

ஏலக்காய் (Cardamom) ஒரு சக்திவாய்ந்த மசாலாப் பொருள் மற்றும் இயற்கை மருத்துவ மூலிகை ஆகும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, காப்பர், மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிசங்கள் ஏலக்காயில் நிறைந்துள்ளன.

ஏலக்காய் செரிமானத்தை தூண்டும் முக்கிய உணவுப் பொருள் ஆகும். இது வயிறு வீக்கம், அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைத்து, செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

இரவு உணவைச்சாப்பிட்ட பின் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானக் குறைகளை குறைக்கும் சிறந்த வழியாகும். ஏலக்காய், செரிமானத்தினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஏலக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் வாய்மூலம் பாக்டீரியாவுடன் போராடி, வாய்துர்நாற்றத்தை போக்கும். வாய் சுகாதாரம் மேம்படும்.

ஏலக்காயில் உள்ள சேர்மங்கள் நரம்புகளை அமைதிப் படுத்தி, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கின்றன. இது அமைதியான தூக்கத்தை தரும்.

டையூரிடிக் பண்புகொண்ட ஏலக்காய் உடலில் நச்சுகளை வெளியேற்றவும் சிறுநீரக செயல்பாட்டை சுத்தப்படுத்தவும் உதவுகின்றது. ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த ஏலக்காய், உடல் கொழுப்பு அளவை குறைக்கும் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும்.

காரத்தன்மை கொண்ட ஏலக்காய் வயிற்று அமிலம் அளவை சமநிலைப்படுத்தி, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இரவு உணவுக்குப்பிறகு ஏற்படும் அசவுகரியத்தில் விரைவான நிவாரணத்தை தருகிறது.

தொண்டையில் சளி ஏற்படுவதை தடுக்கும், தொண்டை புண்களை குறைக்கும், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் குறைபாடுகளைத் தடுக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News