பயணிகளுடன் இழுத்துச்செல்லப்பட்ட கார்

240
Advertisement

நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதால், அதில் அமர்ந்திருந்த பயணிகளுடன் காரை இழுத்துச்சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில்தான் இந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ அருகே ஹஸ்ரத் கஞ்ச் பகுதியில் உள்ள ஜன்பத் என்னும் இடத்தில், காரை நிறுத்திவிட்டு, காரின் டிரைவர் சுனில் தனது நண்பருடன். அங்குள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கச்சென்றுவிட்டார்

இந்த நிலையில், அங்குவந்த கிரேன் ஒன்று அந்தக் காரை இழுத்துச்செல்லத் தொடங்கியது. அப்போது காருக்குள் இருந்தவர்கள் கூச்சல்போடத் தொடங்கினர். இருந்தாலும், அதைப்பொருட்படுத்தாமல் கிரேன் ஆபரேட்டர் காரை இழுத்துச்சென்றார். கடைசியாக 500 ரூபாய் அபராதம் செலுத்திய பிறகே, கார் விடுவிக்கப்பட்டது.

தற்போதுள்ள விதிகளின்படி, நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டுள்ள காருக்குள் ஒருவர் அமர்ந்திருந்தால், அந்த வாகனத்தை இழுத்துச்செல்லக்கூடாது. ஆனால், அதையும் மீறி காரை இழுத்துச்சென்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியதை அடுத்து, இந்தச் சம்பவம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க லக்னோ நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.