இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி, ஜூலை 23 தொடங்கி 27 வரை மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளை வென்றுள்ளதால் இந்த தொடர் தற்போது 2-1 என இருக்கிறது.
4வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவினால், தொடரினை 3-1 என இங்கிலாந்து வென்று விடும். இதனால் கட்டாயம் இந்த போட்டியை வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்தியா இருக்கிறது. இந்தநிலையில் BCCIயிடம் இருந்து கேப்டன் சுப்மன் கில்லுக்கு உத்தரவு ஒன்று பறந்துள்ளதாம்.
இந்திய அணியில் தற்போது வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா என 3 ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில், ஒரு முழுநேர பவுலரை சேர்க்கும்படி BCCI அட்வைஸ் செய்துள்ளதாம். இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே இருவரில் ஒருவருக்கு அணியில் இடம் கிடைக்கலாம். இதில் அர்ஷ்தீப்பை விடவும் குல்தீப் பிளேயிங் லெவனில், சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் அண்மையில் நடந்த பயிற்சி போட்டியில் பந்துவீசிய போது, அர்ஷ்தீப்பிற்கு கையில் அடிபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் கண்டிப்பாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.