Wednesday, December 17, 2025

கைகோர்க்கும் கனடா மற்றும் இத்தாலி! நடத்தப்படும் முக்கிய பேச்சுவார்த்தை! என்ன நோக்கம்?

கனடா மற்றும் இத்தாலி நாடுகள், எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான துறைகளில் இணைந்து பணியாற்றும் நோக்கில் புதிய இருதரப்பு உரையாடலை ஆரம்பித்துள்ளன.

கனடாவின் இயற்கை வள அமைச்சகமும், இத்தாலியின் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து, “Canada–Italy Bilateral Energy and Natural Resources Dialogue” எனப்படும் இந்த உரையாடலை அக்.31ம் தேதி அதாவது இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

இந்த உரையாடலின் முக்கிய நோக்கம், தூய்மையான ஆற்றல் உற்பத்தி, பசுமை தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மற்றும் முக்கிய கனிம வளங்களான Critical Minerals போன்ற துறைகளில் இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும்.

மேலும், ஹைட்ரஜன், கார்பன் குறைப்பு முயற்சிகள், மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் விவாதித்தன. இதன் மூலம், உலகளாவிய எரிசக்தி மாற்ற முயற்சிகளில் கனடா – இத்தாலி கூட்டணி ஒரு முக்கிய பங்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா இயற்கை வள அமைச்சர் Jonathan Wilkinson, ‘இத்தாலி எங்கள் முக்கிய ஐரோப்பிய கூட்டாளி. பசுமையான எதிர்காலத்திற்கான முயற்சிகளில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படப் போகிறோம்,’ என்றார்.

அதேபோல், இத்தாலி அமைச்சர் Gilberto Pichetto Fratin, ‘கனடாவுடன் இணைவது எங்கள் ஆற்றல் பாதுகாப்புக்கும் பசுமை இலக்குகளுக்கும் வலுசேர்க்கும்,’ என தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை ஆண்டு தோறும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என சர்வதேச வட்டாரங்கள் கருதுகின்றன.

Related News

Latest News