ஆரஞ்சு பழம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இது ஜூஸியான மற்றும் சுவையான பழமாகும். வைட்டமின் சி நிறைந்த இந்த பழம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மிக சிறந்தது.
பலர் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஆரஞ்சு பழம் சாப்பிடுவது உங்கள் உடல் நலம் பெரிதும் மேம்படும். இது வைட்டமின் சி நிறைந்ததால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆகவே, குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால், வைரஸ் தொற்றுகளும், சளி, இருமலும் குறைந்து விடும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதில் உதவி புரிகிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியையும் அதிகரித்து, சருமம் இயற்கையான பளபளப்பை பெறுவதற்கு வழிவகுக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, அதனால் செரிமானமும் வலுப்படும். குளிர்காலத்தில் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், வயிற்றை சுத்தப்படுத்தி, இத்தகைய சிக்கல்களில் இருந்து விடுவிக்க உதவும்.
ஆரஞ்சு பழம் சாப்பிட சிறந்த நேரம்
காலை அல்லது மதிய நேரத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். ஒருநாள் 1 முதல் 2 ஆரஞ்சு பழங்கள் போதும், அதிகமாக சாப்பிட வேண்டாம்.
