ஒயிட் பிரட் சாப்பிடலாமா?

255
Advertisement

பலரின் காலை நேர உணவு ஒயிட் பிரட்டாக உள்ளது.
பாலில் முக்கி, தோசைக்கல்லில் இட்டுப் புரட்டி சாப்பிடுவோரும்
உள்ளனர், தோசைக்கல்லில் இட்டு பிரட்டின்மீது நல்லெண்ணை
சிறிது தெளித்து தோசைபோல் புரட்டிப் போட்டு அதை காலை நேர
உணவாக உண்போரும் உண்டு. சேன்ட் விச், பிரட் டோஸ்ட் செய்து
காலை உணவு சாப்பிடுவோரும் உள்ளனர்.

இரண்டு முட்டையைக் கலக்கி, அதில் பிரட் சிலைஸ்களைத்
தொட்டுத்தொட்டுத் தோசைக்கல்லில் இட்டு தோசைபோல்
இரண்டு பக்கமும் மாற்றிப்போட்டு உண்போர் அநேகம் உள்ளனர்.
சிம்பிள் உணவு. உடனடி உணவு, நேரம் மிச்சம், வேலை மிச்சம்
என்பதோடு சாப்பிடுவதையே கஷ்டமான வேலையாகக் கருதும்
பலரின் தேர்வு இந்த பிரெட் ஆம்லெட்தான்.

ஆனால், இந்த ஒயிட் பிரெட் உடல் நலத்துக்கு உகந்ததா?

ஒயிட் பிரட் என்பது மைதா மாவில் செய்யப்படுவதுதான்.
இந்த மைதா மாவு கோதுமை மாவிலிருந்து பல சுத்திகரிப்பு
முறைகளுக்குப் பிறகு தயாரிக்கப்படுகிறது.

மைதாவில் சத்துகள் எதுவும் கிடையாது, தொடர்ந்து ஒயிட் பிரட்
சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு
வரவும் வழிவகுக்கும். உடல் எடையும் அதிகரிக்கும்.

முழுக்கோதுமையை மெஷினில் இட்டுத் திரிக்கும்போது கிடைக்கும்
மாவு பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழுப்பு நிறத்தை நீக்குவதற்குப்
பல்வேறு கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. அதன்பிறகே
வெண்மையாக நிறம் மாறுகிறது.

இந்த வெண்மை நிறம் ஏற்படுவதற்காக கோதுமை மாவில்
என்னவெல்லாம் சேர்க்கப்படுகிறது தெரியுமா?

பென்சாயில் பெராக்சைடு, குளோரின் டை ஆக்ஸைடு,
பொட்டாசியம் புரோமேட் போன்ற கெமிக்கல்கள். சுத்திகரிக்கப்பட்ட
ஸ்டார்ச், இரசாயனங்கள் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது.
இவைதான் நமக்கு ஆரோக்கியக் கேடு விளைவிக்கிறது-

ஒயிட் பிரட் ஒரு துண்டில் 77 கலோரிகள் உள்ளது. ஒயிட் பிரட்
பதப்படுத்தப்படுவதால் இதன் ஊட்டச்சத்துகள் குறைகிறது.
இதை உணவாக உண்பதால் எந்தப் பலனும் இல்லை.

ஒயிட் பிரட் உண்டால் உடனடியாக இரத்தத்தில் குளுக்கோள்
அளவு அதிகரிக்கும். இதயப் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரக
செயலிழப்பு போன்றவற்றுக்கும் வழிவகுக்கும்.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒயிட் பிரட் சாப்பிட்டால்
மனச் சோர்வை உண்டாக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் நியுட்ரிஷன் இதழில் வெளிடப்பட்டுள்ள
கட்டுரையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பிரட் விரும்பிகளே… ஒயிட் பிரட்டா… உங்கள் உடல் ஆரோக்கியமா?
எது வேண்டும் என சிந்தியுங்கள். அவசர உணவு ஆபத்து தரும் என்பதைக்
கவனத்தில் கொள்ளுங்கள். சில நிமிடங்களை சேமிக்க ஆசைப்பட்டு
இத்தகைய உணவை உண்டால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட நேரிடும்.