https://www.instagram.com/reel/CXwarWmly1f/?utm_source=ig_web_copy_link
தக்காளியை வெட்டுவதற்காக சாக்லேட்டைக் கூர்தீட்டிய வாலிபரின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவர் தக்காளிப் பழத்தை நறுக்குவதற்காக கிட்கேட் சாக்லேட்டைக் கூர்மையாகப் பட்டை தீட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மரத்தை இளைத்து பட்டை தீட்டுவதுபோல வேடிக்கையாக அமைந்துள்ளது இந்தச் செயல்.
அந்த இளைஞர் தக்காளிப் பழத்தை ஃப்ரீசரில் வைத்து, அது நன்றாக உறைந்ததும், திடப்பொருளைத் துண்டுதுண்டாக வெட்டுவதுபோல தக்காளிப் பழத்தையும் வெட்டுகிறார். அதேபோல, ஸ்டாபெரி பழத்தையும் ஃப்ரீசரில் உறைய வைத்து துண்டு துண்டாக நறுக்குகிறார்.
நல்ல வேடிக்கையான மனிதர்…