Tuesday, December 16, 2025

ஈர்ப்புசக்தியை மீறும் அதிசயம்., கலிஃபோர்னியாவின் மிஸ்டிரி ஸ்பாட்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் சாண்டா க்ரூஸ் (Santa Cruz) அருகே அமைந்துள்ள “Mystery Spot” என்பது உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியப்படுத்தும் ஓர் இயற்கை அதிசயமாகும். 1939-ம் ஆண்டு ஜார்ஜ் பிராதர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இப்பகுதி, இன்றும் விஞ்ஞானிகளுக்கே புதிராகவே உள்ளது.

இந்த இடத்தில், புவியின் ஈர்ப்புசக்தி வழக்கமானபடி செயல்படாது. ஒரு பந்து தரையில் வைக்கப்பட்டால் அது மேலே ஏறுவது போல் தோன்றும்; மனிதர்கள் ஒரு சாய்வான மேடையில் நிற்கும்போது கூட விழாமல் நிலைத்திருப்பது போன்ற விசித்திர நிகழ்வுகள் நிகழ்கின்றன. பார்வையாளர்கள் தங்கள் உடல் சாய்ந்தபடியே நேராக நின்றது போல் காணப்படுகின்றனர். இதனால் புகைப்படங்கள் கூட நம்பமுடியாதவையாக தோன்றுகின்றன.

விஞ்ஞானிகள் இதை “optical illusion” எனப்படும் பார்வை மாயை என விளக்கினாலும், சிலர் இதை மேக்னடிக் புலத்தின் மாற்றம் அல்லது புவியீர்ப்பு கோண சாய்வு காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் இதற்கான துல்லியமான அறிவியல் விளக்கம் இதுவரை உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.

இவ்விடத்தின் சிறப்பை உணர்வதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடுகின்றனர். “மிஸ்டிரி ஸ்பாட்” சுற்றுப்பகுதியில் வழிகாட்டிகள் சுவாரஸ்யமான விளக்கங்களுடன் சுற்றுப்பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.

இயற்கையின் புதிரை உணர்வதற்கும், மனித கண்ணின் மாயையை அனுபவிப்பதற்கும் “மிஸ்டிரி ஸ்பாட்” ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். உண்மையிலேயே, இயற்பியல் விதிகளையே சவால் விடுகின்ற அதிசய நிலம் இது என்றால் அது பொய்யல்ல.

Related News

Latest News