பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க

359

பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேச, பாடல்கள் கேட்க மற்றும் வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தமிழக போக்குவரத்து துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும்போது சில பயணிகள் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் அளவில் கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேச, பாடல்கள் கேட்க மற்றும் வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி தமிழக போக்குவரத்து துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.