காட்டு யானையை கூலாக கையாண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்

258
Advertisement

பொதுவாக மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை  காட்டு விலங்குகள் கடந்துசெல்லும் நிகழ்வு இயல்பான ஒன்று.இதில் ஆபத்தும் உள்ளது , ரசிக்கும்படியான தருணமும் உள்ளது. மான்கள் ,முயல்கள் போன்ற சாதுவான விலங்குகள் மக்களை அச்சுறுத்தாது. அதேநேரத்தில் , கட்டு எருமை , புலி , யானை போன்றோ விலங்குகளால் அச்சுறுத்தல்கள் இருக்கும்.

இதுபோன்ற ஒரு சூழலில் யானைகள் தன் வழியில் வரும் வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாயிற்று.இங்கோ இது போன்ற ஒரு சூழலை அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூலாக எதிர்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதனை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ,

தகவலின்படி, மாலை 4 மணியளவில் அரசு  பேருந்து ஒன்று  மூணாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது , சாலையின்  ஓர்  திருப்பத்தில் எதிர்பாராதவிதம் காட்டு யானை ஒன்று நின்றுகொண்டு இருக்கிறது.

யானையை கண்டவுடன் பேருந்தை நிறுத்து விட்டார் ஓட்டுநர்.பேருந்தை யானை பார்த்துவிட்டு அதை நோக்கி நகரத் தொடங்கும் வரை பயணிகள்  உற்சாகமாகப் பேசிக்கொண்டு  இருக்கிறார்கள்.யானை  பேருந்தை நெருங்கி வர, பேருந்தில் உள்ளவர்கள் அமைத்து ஆகிவிடுகின்றனர்.

யானை தனது தும்பிக்கையை வாகனத்தின் முன்புற மேல் பகுதியில் வைத்து  தேடுவதுபோல உள்ளது.இச்சமயத்தில் யானையின் தந்தங்கள் பேருந்தின் முகப்பு கண்ணாடியின் மேல் லேசாக பட்டுவிட , கண்ணாடி விரிசல் அடைந்தது.

யானை செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக உள்ளார் ஓட்டுநர் . பேருந்தை வேகமாக ஓட்ட முயற்சிக்கவில்லை, ஒலி எழுப்பி யானையை விரட்ட முயற்சிக்கவில்லை, அல்லது வேறு எந்த தேவையற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை ஓட்டுநர். இதனால் அந்த யானையும் எந்த அசம்பாவித செயலையும் செய்யவில்லை. 

சில நிமிடங்கள் பேருந்தை உரசி பார்த்துவிட்டு , பின்வாங்கி மீண்டும் சாலையின் ஓரத்தில் போய் நின்றுவிட்டது யானை. பின் , ஓட்டுநர் பேருந்தை ஓட்ட  தொடங்கினார். இதுபோன்ற அசாதாரண சூழலை ,கூலாக கையாண்ட ஓட்டுனருக்கு இணையத்தில்  பாராட்டுகள் குவிந்து வருகின்றன.