Sunday, February 8, 2026

மன்னார்குடியில் பேருந்து மோதி விபத்து : 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மாதம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காரைக்குடி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இது போன்ற தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related News

Latest News