கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு விராட், ரோஹித் அணியில் இல்லாததும் கில்லுக்கு கிடைத்த கேப்டன் பதவியுமே முக்கியக் காரணமாகும்.
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்தியாவின் மேட்ச் வின்னராக குல்தீப் யாதவ் இருப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கணித்துள்ளார். இதுகுறித்து ஹைடன், ” இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்படி செயல்படப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
5 டெஸ்ட் போட்டிகள் என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டையாடினால் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. குறைந்தபட்சம் அவர் 20 விக்கெட்களையாவது வீழ்த்த வேண்டும். குல்தீப் மேட்ச் வின்னராக இருந்தால் மட்டும் தான் இந்தியாவால் தொடரை வெல்ல முடியும்,” இவ்வாறு பேசியிருக்கிறார்.
BCCI தொடங்கி கிரிக்கெட் விமர்சகர்கள் வரை பும்ராவின் பந்துவீச்சைக் காண, ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஹைடனோ குல்தீப் தான் இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், எந்த பவுலர் சிறப்பாக செயல்படப் போகிறார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.