Wednesday, December 4, 2024

பூமியில் இருந்து நிலவுக்கு புல்லட் இரயில்- ஜப்பானை கண்டு மிரளும் மற்ற நாடுகள்

ஜப்பானின்  விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் வெளியிட தகவல்  உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.அவர்கள் அளித்த தகவலின்படி பூமியில் இருந்து நிலவுக்கு புல்லட் இரயில் இயக்குவதற்கான திட்டம் தான் அது.

இந்த மெகா திட்டத்தின் கீழ், கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் கஜிமா நிறுவனம்  இணைந்து “ஸ்பேஸ் எக்ஸ்பிரஸ்” என்ற புல்லட் ரயிலை உருவாக்க உள்ளன.இந்த  புல்லட் ரயில் பூமியிலிருந்து சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்தையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்  மின்காந்த தொழில்நுட்பத்தில் இயங்கும்.இதுமட்டுமின்றி நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் கண்ணாடி வசிப்பிடங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.காரணம் மனிதனின் தசைகள் மற்றும் எலும்புகள் குறைந்த புவியீர்ப்பு உள்ள இடங்களில் பலவீனமாகின்றன என்பதினால்  பூமியைப் போலவே வளிமண்டலமும் இருக்கும் அத்தகைய செயற்கை விண்வெளி வாழ்விடத்தைத் தயாரிக்க அந்நாடு யோசித்து வருகிறது.

இதை  தவிர, மனிதர்கள் வாழ்வதில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாத வகையில், பூமியைப் போல் உணரும் வகையில் வளிமண்டலமும் தயார் செய்யப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.மக்கள் வசிப்பிடம்,கண்ணாடியை கொண்டு உருவாக்கப்படும் எனவும், அதில் ஆறுகள் , பசுமையான மரங்கள் உருவாக்கப்படும்.மேலும் இது நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் கட்டப்படும்.

நிலவில் கட்டப்படும் வசிப்பிடத்திற்கு  பெயர் Lunaglass என்றும், செவ்வாய் கிரகத்தில் கட்டப்படும் வசிப்பிடத்தின்  பெயர் Marsglass என்றும் பேரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் வசிப்பிடத்தை  விட்டு வெளியே செல்ல விண்வெளி உடைகளை அணிய வேண்டும்.

இது தவிர, பொது போக்குவரத்தும் இங்கு கிடைக்கும். இருப்பினும், அதன் இறுதி வடிவத்தை அடைய 100 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ரயிலை இயக்க திட்டமிட்டுள்ள  ஜப்பான், திட்டத்தின் மாதிரி வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!