Thursday, July 3, 2025

ஏன் யாரும் அலமாற்றிங்க ? கடுப்பான கல்யாண பெண்

வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று திருமணநாள். அன்றைய தினம் முழுவதும் ஒரு வாழ்நாள் நிகழ்வாக இருக்கும்.இந்நிலையில் தலைமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான திருமண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதேநேரத்தில், விசித்திரமான காரத்திற்காக திருமணங்கள் நிறுத்தப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது உதாரணமாக , தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் , திருமணத்தில் மாப்பிளைக்கு பளார் விட்ட மணப்பெண் , திருமணத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண், மாப்பிளை செய்த காரியத்தால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் போன்று பல விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் , வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.dingwedding_visual என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில்,

திருமணம் முடிந்து மணப்பெண் ஒருவர் தனது மாமனார் வீட்டிற்கு செல்வதற்காக காரில் அமர்கிறார். பொதுவாக மணப்பெண் அவர்கள் மாமியார் வீட்டிற்கு செல்லும் போது பெண் வீட்டார் கதறி அழுதபடி வாழ்த்தி அனுப்பிவைப்பர்.

ஆனால் இங்கோ , அந்த பெண் கிளம்ப தயாராக இருந்தும் ,அவரின் வீட்டார் ஒருவர்கூட அளவில்லை கொஞ்சம் கூட முகத்தில் ஒரு பீலிங் இல்லாமால் இருந்ததால் , மணப்பெண் கடுப்பாகி விடுகிறார். அதிலும் அவர் வீட்டார்கள் கையில் மொபைல் போன்களை வைத்து மணப்பெண்ணை படம்பிடித்தபடி இருக்கிறார்கள்.கடுப்பான மணப்பெண் காரில் அமர்ந்தபடி , “ஏன் யாரும் அழவில்லை?” என கேட்கிறார். ஆனால், யாரும் பதில் சொல்லாததால் கடுப்பில் அங்கிருந்து விடைபெற்றார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news