விருந்தினர்கள்முன் மணமக்கள் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோ
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே மண்டபத்திலும் இல்லத்திலும் உற்சாகம்
கரைபுரண்டோடும். திருமண நிகழ்ச்சியில் இசைச்கச்சேரி,
வாண வேடிக்கை, நடனம் என மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
அந்த வகையில், உறவினர்கள் சூழ்ந்திருக்க, புது மணத்தம்பதியாகப் போகும்
மகிழ்ச்சியில் மணமகனும் மணமகளும் திளைத்திருப்பர்.
இங்கும் அதே மகிழ்ச்சியோடு முதலில் மணமகள் ஆடத் தொடங்குகிறார்.
அதைப் பார்த்து வியப்படையும் மணமகன் முதலில் தயங்குகிறார்.
தயங்கித் தயங்கிப் பின்னால் மீண்டும் மீண்டும் உறவினர்களைத்
திரும்பிப் பார்க்கிறார். பின்னர், தைரியத்தோடு தன் புது மனைவியைப்போல்
உற்சாகமாக ஆடுகிறார். பிரேக் டான்ஸ் இருவரையும் உற்சாகத்தில்
திளைக்கச் செய்துகிறது.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை
10 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
அதைப் பார்த்து, வாவ்…ச்சோ சுவீட்… மகிழ்ச்சியான திருமண நாள் வாழ்த்துகள்
என்றெல்லாம் வாழ்த்தியுள்ளனர் நெட்டிசன்கள்.
வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாகத் தொடங்கியுள்ளனர் இந்தத் தம்பதியர்.