திருமணத்தில் குடிபோதையால் வேறொரு ஆணை மணந்த பெண்

603
Advertisement

உலகில் ஏதோ ஒரு மூலையில் திருமணநாளில் விசித்ரிரமான சம்பவங்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இதுபோன்று மற்றொரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

குடிபோதையில் மணமகன் திருமண இடத்திற்கு தாமதமாக வந்ததால் மணமகள் வேறொரு நபரை மணந்தார்.மணமகன் குடித்துவிட்டு சரியான நேரத்தில் திருமணத்திற்கு வராததால், மணப்பெண் உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்ரா கிராமத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற இருந்தது.அன்று  மாலை 4  மணிக்கு முஹூர்த்தம்  நடைபெறவுருந்தது,அதற்க்காக மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமண மண்டபத்தில் மணமகனுக்காக காத்திருந்தனர்.

ஆனால் மணமகனோ மாலை 8 மணி வரை அங்கு  வரவில்லை.மணமகன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு திருமணம் நடைபெறும் இடத்திற்க்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என கூறப்படுகிறது.

பின்பு , மணமகனும் அவரது நண்பர்களும் குடிபோதையில் மாலை 4 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு மண்டபத்திற்கு வந்துள்ளனர். ஆனால் தன் மகளை அவருக்கு மணமுடித்து தர மறுத்து விட்டார் பெணின் தந்தை.அவருக்கு பதிலாக அங்கிருந்த பெண்வீட்டாரின் உறவினர் ஒருவருக்கு தன் மகளை  திருமணம்செய்து வைத்துவிட்டார்.இதனை அறிந்த குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் குடம்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் திருமண விழாவிற்கு வந்தவர்கள் நேரம் பரபரப்பாக கடந்தது.

மற்றொரு சம்பவத்தில், மணமகன் படிக்காததால் மாலை மாற்றும்  நேரத்தில் மணப்பெண்  திருமணத்தை நிறுத்திய சம்பவமும் நடந்துள்ளது. “நான் பி.எட். படித்தவள். நான் அவருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று மணமகள் கூறிய வீடியோ தற்போது இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முன் ஏன் திருமணம் செய்ய மறுக்கவில்லை என்று அந்த மணப்பெண்ணிடம் கேட்டபோது, பணத்துக்காக அந்த நபரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை வற்புறுத்துகிறார் என்று பதிலளித்தார்.

வடமாநிலங்களில் இதுபோன்று பல காரணங்களுக்காக திருமணம் பாத்தில் நிற்பது ட்ரெண்ட் ஆகிவருகிறது என்றே சொல்லலாம்.