திருமண நேரத்தில் மணமகள் செய்த கூத்து

568
Advertisement

இன்றைய தலைமுறைகள் தங்கள் திருமணம் வெகு விமர்சையாக  , வித்யாசமாக நடைபெறவேண்டும் என்று பலர்  புதுசு புதுசா ரூம் போட்டு திட்டமிடுவதும் உண்டு.திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் ஒரு நன்னாள்,

அன்று தான் ,தன் சிறு வயதிலிருந்து போட்டியாக நினைத்து சண்டையிட்ட உடன் பிறப்புகளுடன் பாசம் பொங்கும் மேலும் தொட்டத்துக்கு எல்லாம்  ஏதாவது சொல்றாங்கப்பா…என நினைத்த பெற்றோர்களை பிரிய மனம் மறுக்கும் !

கடைசிவரை இப்படியே  இருந்தறலாம்னு தோணும். இதுபோன்று ,ஒட்டு மொத்த  உறவுகளை பிரிந்து புது வீட்டிற்கு ஒருவரை நம்பி போகும் தருணம் கடினம் தான்.இது போன்று திருமணத்தில் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/Cc0fpSesrLK/?utm_source=ig_embed&ig_rid=1a3180b1-321b-4a0d-a1ec-5478e9c42dc8

இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த  வீடியோவில் , மணப்பெண் ஒருவர் , தன் செல்லப்பிராணியான நாய் ஒன்றுக்கு தன் கட்டிருக்கும்  சேலைக்கு மேட்ச்சாக ஆடை தைத்து  அணிவித்துள்ளார். மேலும் நாயின் முடியை அழகாக சீவிவிட்டு ஜடை பின்னிவிடுகிறார்.

பின் இருவரும் ஒன்றாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்றனர்.ரத்த சொந்தங்களை மட்டும் பிரிவது பிரிவல்ல ,அது செல்லப்பிராணியாக இருந்தாலும் அதே பாசம் தான் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தையும்  ஈர்த்து வருகிறது.