Monday, September 1, 2025

மூளையைத் தின்னும் அமீபா : தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக பொது சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை 2 நாள்களுக்கு ஒருமுறை வெளியேற்றிவிட்டு குளோரின் பவுடர் சேர்த்து சானிடைசர் செய்ய வேண்டும் என நீச்சல் குளம் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாசடைந்த நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என்றும் மாசடைந்த நீர்நிலைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News